சிலுவையின் வரலாறு - பாகம் 11 : இயேசுவும் வஸ்திரங்களும்

0



சிலுவையின் வரலாறு - பாகம் 11 : இயேசுவும் வஸ்திரங்களும் :



A. குறிப்புகள்:

மற்ற எல்லா பொருட்களையும் விட] வஸ்திரம் என்பது விசேஷ -மானது என்றுதான் சொல்ல வேண்டும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் மட்டும் ஏறத்தால 56-க்கும் அதிகமான முறை வஸ்திரம் என்று வருவதை காணலாம். வஸ்திரம் என்றால் இயேசுவின் இரத்தம் என்று அர்த் -தமாகும். “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந் -தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே” (வெளி19:13). நாமும் இயேசுவின் இரத்தம் என்னும் வஸ்திரத்தால் மூடப்படும் போது, தேவனுடைய நாமமும், தேவனுடைய வார்த்தை -யும் நம்மை பாதுகாக்கக் கூடியதாக மாறும்.

"உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிற -தென்ன?” (ஏசா63:2). இயேசுவின் சரீரத்தை பல விதமான வஸ்திரங்கள் தொட்டது. அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக்குரியவைகளாய் காணப்படுகின்றது. குறிப்பாக சிகப்பு வஸ்திரம் அவருடைய பாடுகளையும், மினுக்கான வஸ்திரம் அவ -ருக்கு உண்டான ஏளனத்தையும் (அவமானத்தையும்) குறிக்கும். வஸ்திரங்களை குறித்த செய்தியை வாசிக்கின்ற எனக்கன்பான சகோதரரே, சகோதரிகளே, நீங்கள் உடுத்தும் வஸ்திரங்ககள் எப்படிப்பட்டவைகளாகக இருக்கிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அடக்கமானதாக, முழு உடலையும் மூடக்கூடியதாக, நேர்த்தியாய் தைக்கப்பட்டதாக உள்ளதா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். இயேசு உடுத்தின வஸ்திரங்ககள் என்றுமே யாருக்குமே இடறலாக இருந்ததில்லை. மாறாக அவரு -டைய வஸ்திரத்திலிருந்து வல்லமை புறப்பட்டது [மாற்5:30). தெய்வீக சுகத்தை கொண்டு வந்தது. நீங்கள் மாத்திரம் சாட்சி -யாக வாழ்ந்தால் போதாது. உங்கள் வஸ்திரமும் சாட்சியாக மாறனும். அதுதான் தேவனுக்கு பிரியமானது. 

B. துணுக்குகள்:

1.யோவா 19:23 நான்கு போர்ச்சேவகர்கள் இயேசுவின் வஸ் -திரத்தை சீட்டு போட்டு எடுத்துக் கொண்டார்கள். இயேசு கடைசி -யாக தன்னுடைய வீட்டை விட்டு கிளம்பும்போது அவருடைய தாயார் செய்து கொடுத்த வஸ்திரம் அது.



சிலுவையின் வரலாறு பாகம் 9

சிலுவையின் வரலாறு பாகம் 10


2. சங் 22:16,17,18 ஆண்டவருடைய வஸ்திரங்கள் எப்படி சீட்டுப் போடப்படும் என்பதை தாவீது தீர்க்கதரிசனமாக சொல்யிருந்தான். 

3."மெஸாலா" என்னும் பெயரையுடைய நூற்றுக்கு அதிபதிக்கு அந்த வஸ்திரம் கிடைத்தது. ஆனால், அவனோ பட்டயத்தினாலே அந்த வஸ்திரத்தைக் கீறிப்போட்டான். இந்த நூற்றுக்கு அதிபதி -யிடம் டெமெட்ராஸ் என்னும் ஓர் அடிமை இருந்தான். அவன் தான் கிழிக்கப்பட்ட இயேசுவின் வஸ்திரத்தைக் கொண்டுபோய் ஒளித்து வைத்தான்.

4. கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தை மூடின வஸ் -திரமனது 14அடி 3அங்குல நீளமும், 3அடி 7அங்குலம் அகலமும் கொண்ட மெல்லிய வெண் வஸ்திரமுமாய் இருந்தது.

5. இயேசுவின் பாடுகளிலும், அவருடைய மரணத்திலும் கடைசி வரையும் அவரை தொட்டுக் கொண்டிருந்த பொருள் வஸ்திரம்தான். வஸ்திரங்கள் என்னும் பலவித உடைகளைக் குறித்துச் வேதத்தில் சொல்லியிருந்தாலும், மத்தேயு, மாற்கு லூக்கா, யோவான் என்னும் நான்கு விசேஷங்களில் 37 அதிகாரங்கள் மூலம் ஏறத் -தால 66 முறை வஸ்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள -தை கவனிக்க வேண்டியதாகும். இவைகளில் நான்கு வகை வஸ்திரங்கள் அவருடைய கடைசி கட்ட நேரத்தில் பயன்படுத்தப்பட் -டுள்ளது. அவைகளை குறித்து கவனிப்போம். வஸ்திரம் என்றால் பழமையாய் போகுதல் என்ற அர்த்தம் உண்டு (எபி 1:11). வஸ்திரம் பழமையாய்ப் போனாலும் நம்முடைய இரட்சிப்பும் மனந்திரும்புதலும் பழமையாகப் போய்விடக் கூடாது.

6. வஸ்திரம் என்பது பொதுவான பெயராகும். அது குறிப்பிட்ட எந்த ஒரு உடையையும் விவரிக்காது. இயேசுவின் சரீரத்தை சீலைகள், மினுக்கான வஸ்திரம், துய்யதான துப்பட்டி, சிவப்பான மேல் அங்கி,கண்களை கட்டிய துணி, உடை போன்றவைகளும் இயேசுவின் மீது காணப்பட்டது. அவைகளைக் குறித்து ஒவ்வொன் -றாக பின்வரும் பகுதிகளில் விபரமாய்க் காணப் போகின்றோம்.

C. இயேசுவின் பாடுகளுக்கு இணையாக 5 வகையான வஸ்திரங்ள் சொல்லப்பட்டுள்ளது


சிலுவையின் வரலாறு பாகம் 7


சிலுவையின் வரலாறு பாகம் 6


1. மத் 27:35 என் வஸ்திரம்

2. மத் 27:31 அவருடைய வஸ்திரம்

3. லூக் 23:11 மினுக்கான வஸ்திரம்

4. மத் 27:28 கழற்றப்பட்ட வஸ்திரம்

5. மத் 27:35 சீட்டு போடப்பட்ட வஸ்திரம்

வஸ்திரம் என்றால் என்ன?

யோவே 2:13 வஸ்திரம் (எல்) இருதயம், ஜீவியம். இருதயத்தில் மனம் திரும்ப வேண்டும்.

விளைவு:

யோவே 2:13 ஆறு நன்மைகள் கிடைக்கும்.

1. இரக்கம் கிடைக்கும்.

2. மனஉருக்கம் கிடைக்கும்.

3. நீடியசாந்தம் கிடைக்கும்.

4. மிகுந்த கிருபை கிடைக்கும்.

5. கிறிஸ்துவின் மனஸ்தாபம் கிடைக்கும்.

யோவே 2:14

6. ஆசிர்வாதமும் கிடைக்கும்.

D. உவமையின் வஸ்திரங்கள் சில:

1) மத் 17:2

வெளிச்சமான வஸ்திரம்

2) மத் 27:28

இயேசு கழற்றின வஸ்திரம்

3) மத் 27:35

சீட்டு போடப்பட்ட வஸ்திரம்

4) லூக் 19:36 -

வழியிலே விரித்த வஸ்திரம் 

5) லூக் 23:11 - 

மினுக்கான வஸ்திரம்

6) யோவா 13:12 இயேசு தரித்துக் கொண்ட வஸ்திரம்

E. மாற் 11:7 கழுதை குட்டியின் மீது போட்ட வஸ்திரங்கள்:--

வி.ம்: ஆதி 49:11 கழுதை குட்டியின் மீது போட்ட வஸ்திரம் (எல்) இரத்தத்தையும் குறிக்கும்

உ.ம்: எண் 28:7 திராட்சரசம் (எல்) பானபலி 

மு.கு: 2தீமோ 4:6 கழுதைகுட்டியின் மீது ஜனங்கள் வஸ்திரங்-களைப் போட்டதினால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது என்ற தீர்க்கதரிசனம் இதன் மூலம் நிறைவேறினது

F. மத் 21:8 வழியிலே விரித்த வஸ்திரங்கள்: 

வி.ம்: மத் 21:9,10,11 இயேசுவை வரவேற்கும் விதமாக ஜனங்கள்

வஸ்திரங்களை வழியில் விரித்ததினால் ஏறத்தால 6 காரியங்கள் அங்கு சம்பவித்தது

a) இயேசுவுக்கு முன்னும் பின்னும் திரள் ஜனங்கள் நடக்க ஆரம்பித்தனர்

b) ஓசன்னா என்கிற ஆராதனை இயேசுவுக்கு உண்டானது

c) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கப்பட்டது

d) அனைவருக்குள்ளும் ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது

e. எருசலேம் பட்டணத்தார் ஆச்சரியப்பட்டனர்

f) இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசி என்கிற சாட்சி கொடுக்கப்பட்டது

மு.கு: லூக் 1:79 உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்று யோவான்ஸ்நானக -னைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் இயேசு வின் வாழ்க்கையிலும் நிறைவேறினது

G. மத் 27:31 அவருக்கு உடுத்தப்பட்ட வஸ்திரங்கள்:

வி.ம்: ஏசா 52:1 இயேசுவுக்கு உடுத்தப்பட்ட வஸ்திரம் (எல்) விருத்த -சேதனமில்லாதவர்களோடும், அசுத்தமானவர்களோடும் அவர் இருக்கப் போவதில்லை என்பதைக் காட்டுகின்றது. 

மு.கு: எசே 42:14 மத் 27:31 அவர் ஏற்கனவே உடுத்தியிருந்த அங்கியை கழற்றிவிட்டு, வேறேவஸ்திரம் உடுத்துவிக்கப்பட் -டதால், வேறேவஸ்திரங்களை உடுத்திக் கொண்டு ஜனங்களின் பிரகாரத்திலே போவார்கள் என்ற தீர்க்கதரிசன வசனம் இதன் மூலம்

நிறைவேறினது

H. மத் 27:35, யோவா 19:23 பங்கிட்டு, சீட்டுப்போட்ட வஸதிரங்கள்:

இயேசுவின் பாடுகளுக்கு அடையாளமான அவருடைய வஸ்தி -ரங்களை முதலாவது நான்காக பங்கிட்டார்கள் (யோவா 19:23). இரண்டாவது, அந்த வஸ்திரங்களின் பேரில் சீட்டுப் போட்டார்கள். ஆதலால், பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் ஆகியவைகளைக் குறித்து தனித்தனியாக பார்ப்போம்.

வி.ம்: 1. ஏசா 9:3 பங்கிடுதல் (எல்) மகிழ்ச்சி (அ) களிகூறுதல் இயேசுவின் வஸ்திரங்களை பங்கிட்டதால் மூன்று தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின:

a. பிரச 11:2 "பங்கிட்டுக் கொடு, பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது” என்ற வசனத்தின்படி, தனக்கு யூதர்களால் ஆபத்து வந்தபோது, தன்னுடைய வஸ்திரங்களை பங்கிட அவர் விட்டுக் கொடுத்தார்

b.சங் 22:18 மத் 27:35

சங்கீதக்காரனைக் கொண்டு தீர்க்கதரிசனத் -தின் மூலம் சொல்லப்பட்ட "என் வஸ்திரங்க -ளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு” என்ற வார்த்தையை தேவன் நிேைவற்றினார்

C. ஏசா 53:12 பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாக பங்கிடுவார் என்றதீர்க்கதரிசன வார்த்தையின்படி, சிலுவை யைச் சுற்றியிருந்த அநேக பலவான்களும், வீரர்களும் கிறிஸ்துவின் வசமாகத் திரும்பினர்

வி.ம் 2. எண் 34:13 நீதி 18:18

சீட்டுப்போடுதல் (எ) சுதந்தரித்துக்

கொள்ளுதல் (அ) விரோதங்களை ஒழிப்பது (அ)சிக்கறுப்பது

இயேசுவின் வஸ்திரங்களின் பேரில் ஏன் சீட்டுப் போட்டார்கள்?

1. யோவா 19:24 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக சீட்டுப்

போட்டார்கள்

2. மாற் 15:24 தன் பங்கை எடுக்கும்படிக்குச் சீட்டுப் போட்டார்கள்

3. மத் 27:35 தீர்க்கதரிசனம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

அதனால் சீட்டுப் போட்டார்கள்

4. யோவா 19:24 யாருக்கு வருமோ என்று அறிந்து கொள்வதற்க்காக சீட்டுப் போட்டார்கள்

5. லூக் 23:34 தாங்கள் செய்வது இன்னதென்று அறியாததினால் சீட்டுப் போட்டார்கள்

மு.கு யார் யார் சீட்டுப் போட்டிருப்பார்கள்?

1நாளா 25:8 சிறியவனும், பெரியவனும், ஆசானும், மாணாக்கணும் ஒருவேளை சீட்டுப் போட்டிருப்பார்கள் 

ii. மினுக்கான வஸ்திரம்:

“அப்பொழுது ஏரோது தன் போர்ச் சேவகரோடு கூட அவரை நிந்தித்துப் பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்தில் அனுப்பினான்” (லூக் 23:11).

வாழ்க்கையில் சில நேரம் எதிர்பார்க்காத வினோதங்கள் நடப் -பதுண்டு. சில சமயம் அந்த விநோதங்களை நம்மால் தடுக்கக் கூட முடியாது. அப்படிப்பட்ட சம்பவம்தான் இயேசுவின் வாழ்க்கை யிலும் நடந்தது. எப்போதுமே நீளமான அங்கியும், வெண்ணுடை -யும் மட்டுமே அணிந்து வந்த இயேசுவுக்கு ஏரோது என்கிற இராஜா மினுக்கான வஸ்திரத்தை உடுத்துவித்தான்.

மினுக்கான வஸ்திரம் என்பது இரண்டு காரியங்களுக்கு அடையாளமாய் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று: நிந்தனை, இரண்டு: பரியாசம் இவை இரண்டுமே இயேசுவுக்கு நேரிட்டது (லூக் 23:11). இவை இரண்டுமே ஏரோது என்கின்றஇராஜாவினால் இயேசுவுக்கு நேரிட்டது. ஏரோது என்றால் வீரியம் என்று அர்த்தமாகும். அதே போல மற்றவர்களை நிந்திக்கிறதிலும் ஏளனம் பண்ணுகிறதிலும் அவன் வீரியம் மிகுந்தவனாக காணப்பட்டுள்ளான்

இயேசுவுக்கு உடுத்துவித்த வஸ்திரங்களில் மினுக்கான வஸ்திர -மும் ஒன்றாகும். மினுக்கான வஸ்திரம் என்றால் பொன் மோதிரத்-திற்கு ஒப்பானது (யாக் 2:2) என்றும் நிந்தனை என்றும் அர்த்தமா -கும் (லூக் 23:11). ஆம் பொது ஜனங்களும், யூதர்களும் இயேசுவை பொன் மோதிரத்தைப் போலப் பார்த்தார்கள். ஆனால், அதிகாரிகளும், பிரதான ஆசாரியர்களும், ராஜாக்களும் நிந்தனைக் -குரியவராக பார்த்தார்கள். ஆனபடியால் அவர் பொன் மோதிரத்தை அணிந்து கொள்ளவும் இல்லை. மினுக்கான வஸ்திரத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

a) லூக் 23:11 ஏரோது ராஜா மினுக்கான வஸ்திரத்தை உடுத்திவித்து

இயேசுவை நிந்தித்தான் லூக் 23:8,12 ஆனால், இயேசுவோ ஏரோதுவுக்கு

அவரைக்குறித்த அநேக காரியங்களை கேட்கும்படி செய்தார்

b) அவர் செய்த அடையாளங்களைக் குறித்த விருப்பத்தை ஏரோதுக்கு ஏற்படுத்தினார்

c) எரோதுவின் ஆசையின்படி தன்னையே அவனுக்கு வெளிப்படுத்தினார்

d) அவனை சந்தோஷப்படச் செய்தார்

e) பகைவர்களாயிருந்த பிலாத்துவையும், ஏரோதுவையும் சிநேககிதர்களாகமாற்றினார்

மு.கு: இப்படியெல்லாம் நன்மை செய்த இயேசுவுக்கு மினுக்கான வஸ்திரத்தை உடுத்தி விட்டபடியினால், உன் மினுக்கினால் உன் ஞானத்த்ை கெடுத்தாய் (எசே 28:17) என்கிறதுர்ச் சாட்சிக்கு ஏரோது ராஜா ஆளானான்.

மினுக்குதல் என்றால் மேட்டிமை என்று வேதம் எச்சரிக்கின் -றது (எசே 28:17). மேட்டிமை வேண்டாம் என்பதற்காகத்தான் இயேசு பரியாசத்தை ஏற்றுக் கொண்டார். நாமும் இயேசுவைப் போலவே மேட்டிமையை வெறுப்போம். தாழ்மையாய் வாழுவோம். கிறிஸ்து இயேசுவை உயர்த்தி காண்பிப்போம். உலகமும் உலகத்தில் உள்ளவைகளும் மினுக்கான வஸ்திரங்களாய் மாறட்டும். நாமும், நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் வெண் வஸ்திரங்களாக மாறுவோம். உலகையே பிரகாசிக்கச் செய்வோம்.


சிலுவையின் வரலாறு பாகம் 3


சிலுவையின் வரலாறு பாகம் 4


சில பொதுவான மினுமினுப்புகள்:

1] எசே 28:7

ஞானத்தினால் மினுக்குதல் 

2) எசே28:17

அழகினால் மினுக்குதல்

3) லூக் 23:11

பரியாசம் என்னும் மினுக்குதல்

4) யாக் 2:2

மினுக்கும் பொன் மோதிரம் 

5) யாக் 2:2

மினுக்கும் வஸ்திரம்

6) யாக் 2:3

மினுக்கும் பெரிய மனுஷன்

7) நீதி 23:31

பளபளப்பாய்த் தோன்றும் மதுபானம்

iii. அங்கிகள்:

"சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியை

பின்னி அவருக்கு சூட்டி (மாற்15:17)”

இயேசு உடுத்தியிருந்த வஸ்திரங்களில் இது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று சொன்னால் மிகையாகாது. அங்கி, இயேசுவின் சரீரம் முழுவதையும் தொட்டுக் கொண்டு இருந்தது. மேல் தொடங்கி கீழ்வரைக்கும் ஒரே துணியினால் நெய்யப்பட்டதாகவும் இருந்துள் -ளது (யோவா19:23). அங்கி என்றால் உபத்திரவம் என்றும், இரத்த சாட்சி என்றும் பொருளாகும் [வெளி7:14;6:11). “சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக் கொண்டான் (சங்109:18)" என்றும் வேதம் சொல்கின்றது. அப்படியானால், அங்கி என்பது சாபத்தையும் குறிக்கும்.

இயேசுவின் சரீரத்தைத் தொட்ட பொருட்களில் அங்கியும் ஒன்று. இயேசுவின் பாடுகளின் போது பயன்படுத்தப்பட்ட அங்கியைக் குறித்து இரண்டு விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கியை எப்படி தைக்க வேண்டும் என்று முதன்முதலில் தையல் கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே கர்த்தர்தான் (யாத் 39:22-27). ஆதியில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த அங்கியானது, பிற்காலத்தில் அவருடைய மரணத்தை மகிமைப்படுத் -துவதாக மாறினது. அங்கி என்றால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை என்று அர்த்தமாகும் (எசே 9:3). அப்படிப்பட்ட மகிமை பொருந்திய அங்கியைக் குறித்து தியானிப்போம்.

இயேசுவைக்குறித்து பார்க்கும் போது மூன்று வித அங்கிகளை கவனிக்க முடியும்.

1) மேல் அங்கி (மத்27:31). இது மிகுந்த உபத்திரவத்தை குறிக்கும். 

2) சிவப்பான அங்கி (யோவா19:2). இது இரத்த சாட்சியாக மரிப்பதைக் குறிக்கும்.

3) தையல் இல்லாத அங்கி [யோவா1923). இது சாபத்தைக் குறிக்கும். இவைகளைக் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

a. மாற் 15:20 சிவப்பான அங்கி:--

வி.ம்: மாற் 15:20 சிவப்பான அங்கி (எ) பரியாசம் இயேசு எட்டு விதங்களில் பரியாசம் பண்ணப்பட்டார்.

a) லூக் 22:63 அடித்து பரியாசம் பண்ணினார்கள்

 b) மாற் 10:34 துப்பி பரியாசம் பண்ணினார்கள்

c) மத் 27:29 ராஜா என்று சொல்லி பரியாசம் பண்ணினார்கள்

d) லூக் 23:11 நிந்தித்துப் பரியாசம் பண்ணினார்கள்

e) மாற் 15:31 இரட்சிக்கத் திராணியில்லாதவன் என்று பரியாசம் பண்ணினார்கள்

f) மத் 27:29 வாழ்க என்று சொல்லி பரியாசம் பண்ணினார்கள்

g) மாற் 15:20 வெளியே கொண்டுபோய் பரியாசம் பண்ணினார்கள் 

h) மத் 27:31 அவருடைய அங்கியை கழற்றி பரியாசம் பண்ணினார்கள்

b. யோவா 19:23 தையல் இல்லாததும், நெய்யப்பட்டதுமான அங்கி

வி.ம்: வேதத்திலுள்ள மற்ற ஆடைகள் அனைத்தும் சித்திரத் தையலாடை என்ற பெயரில் தையல் உள்ளதாகவே காணப்படு -கிறது. இயேசுவின் அங்கி மட்டும்தான் தையல் இல்லாத ஆடை -யாகக் காணப்பட்டது. காரணம்: இயேசுவின் சரீரத்தின் எழும்புக -ளில் ஒன்றும் முறிக்கப்படாமல் எப்படி பாதுகாக்கப்பட்டதோ (யோவா 19:36), அதேபோல அவருடைய அங்கியும் தையல் இல்லாததாய் பிதாவாகிய தேவன் பாதுகாத்தார்.

யோவா 19:23 நெய்யப்பட்டது:

நெய்யப்பட்டது (எ) கிழியாதபடிக்கு உறுதியானது என்று அர்த்தம் (யாத் 28:32). ஆம், இயேசுவைக் குற்றம்சாட்டின பிரதான ஆசாரி -யனின் வஸ்திரம் கிழிந்தது (மத் 26:65). தேவாலயத்தின் திரைச் -சீலை கிழிந்தது (மத் 27:51). சீஷர்கள் மீன் பிடித்த வலைகூட கிழிந்து போனது (லூக் 6:5). ஆனால் இயேசுவின் அங்கியோ கிழியவே இல்லை,

C. இயேசுவின் பாடுகளில் மூன்று வகையான அங்கிகளைப் பார்க்கலாம்:

1. மத் 27:31 மேல் அங்கி

2.யோவா 19:2 சிவப்பான அங்கி

3. யோவா 19:23 தையல் இல்லாத அங்கி

அங்கி என்றால் என்ன?

வெளி 6:11 அங்கி (எல்) இரத்தசாட்சி வெளி 7:14 மிகுந்த உபத்திரவம்

விளைவு:

நான்கு விலையேறப்பெற்ற ஆசீர்வாதம் கிடைக்கும்.

வெளி 7:9

1.வெள்ளை அங்கி கிடைக்கும்.

2. குருத்தோலை கிடைக்கும்.

3. சிங்காசனம் கிடைக்கும்.

4. ஆட்டுக்குட்டியானவரே கிடைப்பார்.

1. மாற் 12:38

உபதேசம் என்னும் அங்கி 

2. மாற் 15:20

பரியாசம் என்னும் சிவப்பு அங்கி

3. லூக் 20:46

முதன்மையை விரும்பும் நீண்ட அங்கி 

4. யோவா 19:2

பாடுகள் என்னும் சிவப்பான அங்கி

5. யோவா 19:23

தையல் இல்லாத நெய்யப்பட்ட அங்கி

6.அப் 9:39

மரணம் என்னும் தொற்காளின் அங்கி 

7. வெளி 6:11

இரத்தசாட்சி என்னும் வெள்ளை அங்கி 

 8. வெளி 7:9

பரலோகத்தில் காணப்படும் வெள்ளை அங்கி 

9. வெளி 7:14

இரத்தத்தினால் தோய்க்கப்பட்ட அங்கி

iii. துய்யுதான துப்பட்டி: "யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி” (மத் 27:59).

தூய்மை என்றும், சுத்தம் என்றும் நாம் பேசுகின்றோம். ஆனால், பல நேரத்தில் நம்மிடத்தில் சுத்தம் என்பது சுத்தமாக இல்லாமல் போய் விடுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மனுஷகுமாரனாய் வாழ்ந்த இயேசு சுத்தமுள்ளவ -ராய் வாழ்ந்துள்ளார். எங்கும் பரிசுத்தமாய் நடமாடியுள்ளார். ஆனபடியினால்தான், அவருடைய மரண அடக்கத்தில் (தூய்மை யான) துப்பட்டியை பயன்படுத்தியுள்ளனர். துய்யாதானத் துப்பட்டி என்பதற்கு மெல்லிய துப்பட்டி என்றும் பொருள் உண்டு.(மாற் 15:46)

 a. துப்பட்டி என்றால் என்ன?

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலபீடத்தையும், பலிபீடத்துக்கான பொருட்களையும் மூடி வைப்பதற்க்காக துப்பட்டி பயன்படுத்தப்பட்டுள் -ளது. ஆனபடியினால்தான் இயேசுவும் தன்னையே ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்ததினால் அவருடைய உடலையும் துப்பட்டியினால் மூடினார்கள். இந்த சம்பவம் எதேச்சகரமாக (முன்கூட்டியே தீர்மானித்து] நடந்தது கிடையாது. நம்மை பலிபீடமாக மாற்றிக் கொண்டு, துய்யதான துப்பட்டியைப் போல தூய்மையாக நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.

துப்பட்டி என்பது எச்சரிப்பையும் காட்டுவதாக உள்ளது. இயேசு சிலுவையை சுமந்து கொண்டு கொல்கொதா என்று சொல்லப்படும் மண்டை ஓடு என்று அர்த்தம் கொள்ளும் இடத்திற்கு போகும் போது ஒரு வாலிபன் துப்பட்டியால் தன்னை மூடிக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றான். அவனை அழைத்து கொஞ்ச தூரம் சிலுவையை சுமக்கச் சொன்னதும், தன் சரீரத்தை முடியிருந்த துப்பட்டியை போட்டு விட்டு நிர்வாணமாக ஓடிப் போனான் [மாற்14:51,52). இது ஓர் எச்சரிப்பின் செய்தியாகும்.

எல்லாரும் சிலுவையை சுமக்க முடியாது, எல்லாரும் பலிபீடமாக மாறமுடியாது. எல்லாராலும் இயேசுவைப் பின்பற்றவும் முடியாது. துய்யதான துப்பட்டி என்கிற பரிசுத்தம் யாரிடம் அதிகமாக உள்ளதோ அவர்களால் மட்டும்தான் முடியும். எனக்கு அன்பான சகோதரர் -களே, சகோதரிகளே நீங்கள் பரிசுத்தமாய் இருக்கின்றீர்களா? உங்கள் உள் உறுப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள், யாவும் பரிசுத்தமாக உள்ளதா என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இல்லாவிட்டால் கர்த்தர் உங்களை பரிசுத்தமாக மாற்ற வல்லவராக இருக்கிறார்.

ஒடிப் போகின்றவர்கள் உலகத்தை ஜெயிக்க முடியாது. இயேசு -வுக்குள், இயேசுவுக்காக, சத்திய வசனத்தைக் கொண்டு நிலைத்து நிற்பவர்கள் தான் உலகத்தையும், சாத்தானையும் ஜெயிக்க முடியும்.

துப்பட்டியை வைத்திருந்த இரண்டு பேரை பாருங்கள் (மாற்14:51,52; 15:46). ஒருவன் வாலிபன், மற்றொருவன் யோசேப்பு. வாலிபன் துப்பட்டியை போட்டு விட்டு ஓடிப்போனான். அதனால் அவன் நிர்வாணி என்கிற அவமானச் சின்னமாய் மாறினான். ஆனால் யோசேப்பு துய்யதான மெல்லிய துப்பட்டியோடு இயேசு -வின் சரீரத்துக்காக ஆயத்தமாய் இருந்தான். அதனால், அவன் பெயர் வேதத்தில் இடம் பிடித்தது. நீதிமான் என்கிற உயர்ந்த பட்டத் -தையும் பெற்றுக் கொண்டான்.

இதை வாசிக்கும் எனக்கன்பானவர்களே, நீங்கள் வாலிபனை சார்ந்தவர்களாக இருக்கின்றீர்களா? அல்லது யோசேப்பு என்னும் நீதிமானாக மாறவிரும்புகின்றீர்களா என்பதை சிந்தித்து தீர்மானம் பண்ணுங்கள்.

சாதாரண துப்பட்டி மெல்லிய துப்பட்டியாக மாறட்டும், மெல்லிய துப்பட்டி துய்யதான துப்பட்டியாகட்டும். மெல்லிய துப்பட்டியும், துய்யதான துப்பட்டியும் பலிபீடமாக மாறட்டும். கிறிஸ்து இயேசுவுக் -காக உங்களையே பலியாக ஒப்புக் கொடுங்கள். கிறிஸ்துவும் உங்களை ஏற்றுக் கொள்ளுவார்.

இயேசுவின் பாடுகளின் போது இரண்டுவித துப்பட்டி பயன்படுத் -தப்பட்டது. அந்த துப்பட்டிகள் இரண்டுக்கும் இரண்டு வித பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலிபீடத்திற் -கும், ஆசரிப்பு கூடாரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட துப்பட்டி, பின் நாட்களில் இயேசுவின் மரணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. துப்பட் -ழயில் கிடைத்த தரிசனம்தான் பேதுருவை புறஜாதியாருக்கும் பிரசங்கிக்கும் அப்போஸ்தலனாக மாற்றினது (அப் 11:5). துப்பட்டி என்றால் போத்துக் கொள்ளுதல் என்று அர்த்தமாகும். நாமும் துப்பட்டியாய் மாறுவோம். இயேசுவின் ஊழியத்தைச் செய்வோம்.

b. மத் 27:59 துய்யதான துப்பட்டி:--

வி.ம்: எபே 5:27 துய்யதான என்றால்

a) கறைதரை இல்லாதது

b) பரிசுத்தமானது

c) பிழையற்றது

d) மகிமைக்கு ஒப்பானது

e) சபைக்கு இணையானது

f) ஒப்புக் கொடுக்கப்பட்டது

C. மாற் 15:46 மெல்லிய துப்பட்டி:

வி.ம்: லூக் 7:25 மெல்லிய என்றால்

a) அலங்கார வஸ்திரம்

b) செல்வமான வாழ்க்கை

c) அரசனுக்கு ஒப்பானது

d) அரண்மனைக்கு இணையானது உ.ம்: வெளி 19:14 பரலோக சேனைகள் மெல்லிய வஸ்திரம் தரித்து இயேசுவைப் பின்பற்றினார்கள் 

d. இயேசுவுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பட்டி நான்கு விதங்களில் சொல்லப்பட்டுள்ளது: 

1. மத் 27:59 துய்யதான துப்பட்டி.

2. லூக் 23:53 மெல்லிய துப்பட்டி.

3. மாற் 15:46 வாங்கிக் கொண்டு வந்தது.

4. மாற் 15:46 இயேசுவைச் சுற்றியது.

e. துப்பட்டி என்றால் என்ன?

எண் 4:13 துப்பட்டி (எல்) பலிபீடம்.

1நாளா 22:1 பலிபீடம் (எல்) கர்த்தருடைய ஆலயம். 1கொரி 3:17 நீங்களே அந்த ஆலயம்

ஆலயத்தின் வாக்குத்தத்தம்:

யோவே 3:28 ஆலயத்திலிருந்து ஒரு ஊற்று உண்டாகி

உங்களை நிரப்பும்.

f. வித்தியாச வித்தியாசமான துப்பட்டிகள்:

1] எண் 4:6

நீளமான துப்பட்டி

2) எண் 4:8

சிவப்பு துப்பட்டி

3) எண் 4:9

இளநீள துப்பட்டி

4) எண் 4:13

இரத்தாம்பர துப்பட்டி

5) நியா 14:12

விடுகதை என்னும் துப்பட்டி

6) மத் 27:59 

துய்யதான துப்பட்டி

7) மாற் 14:51,52

நிர்வாணம் என்னும் துப்பட்டி

8) மாற் 15:46

மெல்லிய துப்பட்டி

9) அப் 10:11

தரிசனம் என்னும் துப்பட்டி

iv. சீலைகள்

a. குறிப்புகள்:

“அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைக் கந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்" (யோவா19:40).

சீலை என்றதும் இது பெண்கள் பயன்படுத்தும் வஸ்திரமல்லவா பிறகு எப்படி இது இயேசுவின் சரீரத்தை தொட்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இந் நாட்களில்தான் சீலையை பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர். பழைய ஏற்பாட்டு காலத்தில் முக்கியத் தலைவர்களும், பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கூட சீலை -யைதான் கட்டிக் கொண்டார்கள் (Iநாளா 15:27). அதாவது முக்கி -யமான ஆண்கள் முக்கியமான நிகழ்ச்சியின் போது சீலையை பயன்படுத்தியுள்ளனர்.

அந்த காலத்திலேயே நிறைய வேலைப்பாடுகள் நிறைந்த சீலை -களை தயாரித்துள்ளனர். இளநீளம், இரத்தாம்பரம், சிவப்பு நூல், பஞ்சு நூல் (வெள்ளை நிறம்) ஆகிய நான்கு நிறம் கலந்த அழகான சீலைகளை வடிவமைத்துள்ளனர் (யாத் 36:35). கேருபீன்களின் உருவமும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது, விசித்திரமான வேலைப் -பாடுகளும் செய்யப்பட்டிருந்தது (யாத்26:31). இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. அதாவது இந்நாட்களில் தரி நெய்கிறவர்கள் என்று ஒரு கூட்டத்தாரை நாம் சொல்வது போல, சீலைகளை நெய்வதற்க்காகவே ஒரு வம்சம் தனியே உருவாக்கப்பட்டு வாழ்ந்து வந்தது (Iநாளா4:21). இவர்கள் மெல்லிய சீலைகளை நெய்வதில் மிகத் திறமையானவர்கள்.

சீலை என்பது வேதத்தில் மூன்று விதத்தில் சொல்லப்பட்டுள் -ளது.

 a) சீலை,

 b) சேலை,

 c) புடவை.

a) சீலை: தேவனுக்கும், பலிபீடத்துக்கும், கிருபாசனத் -துக்கும் பயன்படுத்தப்பட்டது [யாத் 30:6).

b) சேலை: தண்டனையால் மரித்தவர்களுக்கு மட்டும் பயனபடுத்தக் கூடியது (அப் 5:6).

c) புடவை: தலைவர்கள், பாடகர்கள், இசைக் கலை -ஞர்கள் பயன்படுத்தினார்கள் (IIநாளா 5:12).

இந்நாட்களில், சுடிதார் என்ற வஸ்திரத்தை எடுத்துச் கொண் -டால், அதில் பல விதங்கள் இருப்பதைப் போல, அந்நாட்களில் உருவாக்கப்பட்ட சீலைகளிலும் பலவிதங்கள் காணப்பட்டன.

உடுப்பு போன்ற சீலை, மெல்லிய புடவைக்கு ஒப்பான சீலை, பட்டுப் -புடவை போன்ற சீலை, சித்திர தையல் வேலைப்பாடுகள் நிறைந்த சிலை போன்ற பலவிதங்களில் கிடைத்துள்ளன. இவைகளைத் தவிர செத்துப் போனவர்களின் பிரேதங்களை சுற்றி வைப்பதற்க் -காகவே சீலைகள் தயாரிக்கப்பட்டன (யோவா 11:44). அதற்கு பிரேதச் சீலை என்று பெயர்.

பழைய ஏற்பாட்டு சீலைக்கும், புதிய ஏற்பாட்டு சீலைக்கும் ஆவிக்குரிய வித்தியாசமுண்டு. பழைய ஏற்பாட்டு சீலை, கிருபாச -னத்தையும், புதிய ஏற்பாட்டு சீலை மரணத்தையும் குறிக்கும்.

இயேசு நமக்காக மரித்து சீலைகளினால் சுற்றப்பட்டபடியினால் நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டை நெருங்கும் சிலாக்கியத் -தைப் பெற்றுக் கொண்டோம்.

இயேசுவின் பாடு மரணத்தின் போது ஏறத்தால மூன்று வித -மான சீலைகள் பயன்படுத்தியுள்ளனர். சீலை என்றால் முதலாவது: மறைவைக் குறிக்கும் (எண் 4:5) இரண்டாவது: காரிருளையும் குறிக்கும் (ஏசா 50:3). ஆம், சீலையால் சுற்றி இயேசுவின் சரீரம் மறைக்கவும்பட்டது. மரணம் என்ற காரிருளும் அவருக்கு வந்தது. சீலை என்ற வார்த்தை சேலை என்றும் புடவை என்றும் சொல்லப்பட்டுள்ளது (யோபு 16:15, அப் 5:6, 1சாமு 21:9). ஆனால் சீலையை இயேசுவுக்கும், சேலையை மனிதர்களுக்கும், புடவையை ஆயுதங்களைச் சுற்றி வைப்ப -தற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

இப்படி சிலையைக் குறித்து ஏராளம், ஏராளமான ஆதாரங்க -ளும், அருமையான உதாரணங்களும் காணப்பட்டாலும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளோடு சம்பந்தப்பட்ட சிலைகள் மூன்று வகைப் -படும். அந்த மூன்று வகை சீலைகளும் நமக்கு நிறைய பாடங்க -ளையும், இயேசுவின் பாடுகளைக் குறித்த விளக்கங்களையும் கற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் போய், வாசித்து அறிந்து, தெரிந்து கொள்வோம்.

b. இடுப்பில் கட்டிய சீலை:--

"பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்க -ளைக் கழுவவும். தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்” (யோவா 13:5).

இயேசுவின் வாழ்க்கையில் பாடுகள் என்பது இங்குதான் ஆரம்பிக்கிறது. அதாவது, பஸ்கா பண்டிகைக்கு முன்பு, இராப் -போஜனம் கொடுப்பதற்கு முன்னதாக, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து சீஷர்களின் கால்களைக் கழுவிதான் இடுப்பில் கட்டியி -ருந்த சீலையினால் அவர்களின் கால்களைத் துடைத்தார். அப்படியானால், சீலையை அவர் தொட்டார் என்பது நன்கு புலப்படுகின்றது.

இந்த சீலை சுத்திகரிப்புக்கும், கழுவப்படுவதற்கும் இணையாக சொல்லப்பட்டுள்ளது. இயேசு சொன்னார்: நான் உன்னைக் கழு -வாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார் (யோவா 13:8).ஆம், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்தவ வாழ்க்கைக் -காக நாம் கழுவப்பட வேண்டும். IIகொரி 7:1 சொல்வதைப் போல நம்முடைய மாம்சத்திலும் ஆவியிலும் உள்ளதான அசுசி நீங்க நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும். சீலையைக் கொண்டு சீஷர்களின் கால்களை துடைத்து சுத்தப்படுத்தினார். அதுபோல நாமும் சுத்தமாக்கப்படுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

c. யோவா 13:4 இயேசு இடுப்பில் கட்டியிருந்த சீலை:

யோவா 13:5 இடுப்பில் கட்டியிருந்த சீலை (எல்) சுத்திகரிப்பை குறிக்கும்

வி.ம்: யோவா 13:7 அது இன்னதென்று நாம் அறியாத சுத்திகரிப்பு

d. உடலைக் கட்டிய சீலை:

"அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்” (யோவா 19:40)

முதலாவது; இயேசுவின் சரீரத்தை சுற்றிலும் கட்டின இந்த சீலை கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களின் கட்டுப்பா -டான வாழ்க்கையைக் காண்பிக்கின்றது. மேற்கண்ட வசனத்தில் அடக்கம் பண்ணும் முறை என்று வாசிக்கிறோம். அடக்கம் என் -றால் செத்தவர்களை பிரேத குழியில் புதைப்பதைக் குறிக்குவில் -லை. “என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கை யாயிருக்கிறது" (மத் 26:12). ஆம், அடக்கம் அல்ல செய்கை. இதுபோலதான் நம்முடைய மூலையில் இருந்து எழும்பும் தவறான எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகளை அடக்கம் பண்ணப் -பட வேண்டும். இவைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் அடக்கம் பண்ணுகிறவர்கள்தான் மெய்யான கிறிஸ்தவன், கிறிஸ்தவள்.

இரண்டாவதாக: அந்த சீலையில் சுகந்தவர்க்கங்களை பயன்படுத்தினார்கள் என்று பார்க்கின்றோம். சுகந்த வர்க்கம் என்றால் தூபம் என்று பொருள் (IIநாளா2:4). தூபம் என்றால் துதி. துதியை காலையிலும், மாலையிலும், விசேஷித்த நாட்களிலும் செலுத்த வேண்டும் என்று அதே வசனம் சொல்கின்றது. ஆம், தூபம் என்னும் துதியின் சீலையினால் நாம் கட்டப்படும்போது நம் வாழ்க்கை பாதுகாக்கப்பட்ட, கட்டுப்பாடுள்ள வாழ்க்கையாக மாறும்.

சீலையைக் கொண்டு இயேசுவின் சரீரத்தை நான்கு இடங்களில் கட்டினார்கள். அதாவது கைகள், கால்கள், தலை, மற்றும் உடல். இதே போல நம்முடைய உடலிலும் நாம் கட்டுபாடாய் பாதுகாத்துக் கொள்ள கூடிய நான்கு பகுதியுண்டு. கண், செவி, நாவு, வாய் இந்த நான்கையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண் -டால் எந்த சோதனையையும் உங்களால் ஜெயிக்க முடியும்.

கண்களால் இயேசுவை மட்டும் பாருங்கள். செவியால் இயேசுவின் சத்தத்தை மட்டும் கேளுங்கள். நாவை துதிக்க மட்டும் பயன்படுத்துங்கள். வாயை சுவிசேஷம் சொல்ல மட்டும் உபயோகி -யுங்கள். இப்படி செய்தால் உங்களுக்காக இயேசு சீலையினால் கட்டபட்டது வீண் போகாது.

God bless you 

Umn ministry 


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*