சிலுவையின் வரலாறு பாகம் 8 குருத்தோலை ஞாயறு

0


சிலுவையின் வரலாறு பாகம் 8 குருத்தோலை ஞாயறு



இயேசுவின் பவனி:

பஸ்கா பண்டிகையின் ஏழு நாட்களுக்கு முன்பு இயேசு மீண்டும் எருசலேம் நகருக்குள் வந்தார். அது நிசான் மாதத்தின் 9ம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகும். தீர்க்கதரிசியாகிய சகரியா -வைக் கொண்டு சக. 9:9 ல் சொல்லப்பட்டுள்ள

"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." என்கிற வசனங்கள் நிறைவேறும்படியாக இவைகள் நடந்தது.

நகரத்தை நெருங்குகையில் அவரைச் சுற்றிக் கூடி வந்தி -ருந்த மக்களில் பெரும்பாலானோர் தங்களின் மேல்அங்கிகளை -யும், துப்பட்டிகளையும், மற்றும் பல வஸ்திரங்களையும் வழியில் விரித்தார்கள். இன்னும் சிலரோ ஒளிவ மரக்கிளைகளை வெட்டி அவைகளை தரையில் பரப்பினார்கள். மற்றும் பலரோ ஒலிவமரத் -தின் நீண்ட இலைகளை கையில் பிடித்துக்கொண்டு

"கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்றுக் கூறி ஆர்பரித்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்புதான், இறந்த லாசருவை உயிரோடு எழுப்பியதை அவர்கள் கண்டிருந்தனர். அதை ஒருவருக்கொருவர் அந்நாட்களில் பேசிக்கொண்டும் இருந்தனர். அதனால் இயேசு நகருக்குள் நுழைந்ததும் நகரமே விழாக்கோலம் பூண்டது போல ஆனது. நகரம் முழுவதும் இயேசுவை வரவேற்கும் பேரணியால் நிறைந்தது.

முன்பு மதவாதிகளின் கூலிகளாக இயேசுவின் மீது கல்லெரி -ந்து கொல்லத் துரத்தியவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றவர் -களாக கைகளில் ஒலிவமரக் கிளைகளை ஏந்தி இயேசுவை வர -வேற்கிறார்கள். அன்று கல்லெறிந்த கைகள் இன்று ஒலிவ கிளைகளை ஏந்தி செல்கின்றன. “இதோ, உலகமே அவனுக்குப் பின் சென்று போயிற்றே" (மத் 21:10) என்று மதவாதிகளும், பிரி -விணை வாதிகளும் புலம்பிக்கொண்டிருந்தனர். 


சிலுவையின் வரலாறு பாகம் 5


சிலுவையின் வரலாறு பாகம் 7


சிலுவையின் வரலாறு பாகம் 3



கர்த்தர் ஏறிய கழுதை:--

இந்நிகழ்ச்சி சகரியா தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இருந்தது. (சக 9:9)

கிறிஸ்துவின் அரச பவனிக்காக மனுஷரில் ஒருவனும் ஒருக் -காலும் ஏறியிராத கழுதைக்குட்டி கட்டப்பட்டிருந்தது. அதனை கிறிஸ்து தூரத்தில் கண்டார். அதனை ஆண்டாண்டு காலங்களுக் -கு முன்பு சகரியாவின் கண்களும் தரிசனத்தில் கண்டிருந்தன.

கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிறவரும், அனைத்தையும் திட்டமும் ஒழுங்குமாக செய்கிறவ -ருமாவார்.

அவரது திட்டத்தில் எவரும் விதிவிலக்கல்ல. அவரது கிருபை எவரையும் புறம்பே தள்ளவுமில்லை. அவருக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நிகழ்ந்து விடுவதுமில்லை. பாவத்தால் அலங் -கோலமான உலகத்தில் வாழ்கிற நாம் அவருக்குள் அடைக்கலம் புகும்போது அனுபவிக்கும் பராமரிப்பு எவ்வளவு அதிகம்? அவர் நம்மை மறந்து விடுகிற தெய்வமல்ல. அவரது கரங்களில் அர்ப் -பணிக்கும் போது அரசனின் திட்ட வழியில் நாமும் ஒரு கருவி -யாகிறோம்.

அந்தகார உலகில் அதன் மகிமை புரியாது. ஆனால் ஒளியின் உலகில் நம் விழிகள் வியப்பில் விரியாமல் போவதில்லை. அவ ருக்காக நாம் வைத்த ஒரு சுவடுகூட அங்கு மறக்கப்பட்டிருக்காது. 

இயேசு கிறிஸ்து - யார்?

அவர் ஒரு சத்தியம் தேடியோ, தத்துவ சிந்தனையாளரோ அல்ல.

கிரேக்க நாட்டில் சீனோ டெமோகிரீட்டஸ், பித்தாகோரஸ், சாக்ரடீஸ், பிளோட்டோ, அரிஸ்டாடில் போன்றோரும் இந்தியாவில் யக்ஞவல்கியன், உத்தாலக ஆருணி, புத்தர், போன்றோரும் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகியோரும் சிறந்த தத்துவ ஞானிகளாகப் பாராட்டப்படுகின்றனர்.

சத்தியத்தைத் தேடி அலைந்த சித்தர்களும் முனிவர்களும் எத் தனையோபேர் நம் தேசத்தின் சந்தியெங்கும் காணப்பட்டனர். இவர் -கள் தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம் போன்றவை பற்றி பலப்பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒருவரைப் போல தமது சிந்தனைக் கருத்துகளை வெளியிட்டவரல்ல இயேசுகிறிஸ்து.

தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம், சொர்க்கம், நரகம், நியாயத்தீப்பு, பாவம், சாத்தான், தூதர்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், போன்றவை பற்றி தெளிவாகவும், அழுத் -தமாகவும், அதிகாரமுடனும் கூறியவர் இயேசுகிறிஸ்து. அவரது அபிப்பிராயமற்ற அதிகாரமான சொற்களைக் கேட்டு மக்கள் மலைத்தனர் (லூக். 4:36). அவருக்கு அனைத்தும் தெரிந்திருந் -ததால் சிந்தனையின் தத்துவங்கள் கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமலிருந்தது (யோவா 1:1,2; 3:11-13; 2:25; 5:24, 30,36; 16:30).

மேலும் சத்தியத்தை அவர் தேடவில்லை. சத்தியம் என்றால் என்ன என்று அவரே பதிலளித்தார். அவரது வார்த்தை சத்தியம் (யோவா 17:17). அவரே சத்தியம் (யோவா 14:6). ஆதலால் அப்ப-டிபட்ட இயேசுவை ஓசன்னா பாட்டுப்பாடி ஊர்வலமாக அழைத் -துச் செல்வது தவறே கிடையாது.

அவரை தமக்குமுன் நிறுத்திக்கொண்டு ஆன்மீக கண்குருட -னான பிலாத்து கேட்டான் சத்தியமாவது என்ன? நாமும் ஆன்மீகக் குருடர்களா...


சிலுவையின் வரலாறு பாகம் 2


சிலுவையின் வரலாறு பாகம் 4

சிலுவையின் வரலாறு பாகம் 6


குருத்தோலை ஏந்திய மக்கள்:

பண்டிகைக்காக கூடிவரும் மக்கள், கூடாரப்பண்டிகையின்போது ஏழுநாட்கள் ஈச்சமர குருத்தோலைகளை ஏந்தியபடி பலிபீடத்தைச் சுற்றி வந்து ஓசன்னா என்பர். எட்டாவது நாள் ஏழுமுறை சுற்றி -வந்து ஓசன்னா என்பர். அதனை பெரிய ஓசன்னா என அழைப் -பர். ஓசன்னா என்றால் இப்போதே இரட்சியும் என்பது பொருள்.

இயேசு கிறிஸ்துவைக் கண்டவுடன் ஈச்சமர குருத்தோலை -களை ஏந்தி கழுதையின்மேல் ஆடைகளை விரித்து ஓசன்னா பாடிய மக்கள் அவரை மேசியா என அறிக்கையிட்டனர். அது வெற்றி பெற்று வரும் ஓர் அரசனுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு சற்றும் குறைந்தது அல்ல. அப்போது அவர்கள் ரோம சாம்ராஜ் -யத்தின் ஆளுகையிலிருந்து வரும் சரீர மீட்பைப் பற்றி எண்ணி -னார்களே தவிர, ஆன்மீக விடுதலையைப் பற்றி எண்ணிப்பார்க் -கவில்லை.

வாய் நிறைய ஓசான்னா பாடி ஆர்ப்பரித்தவர்கள் ஐந்து நாட் -கள் முடிந்தவுடன் வாய்கிழியக் கத்தினர். அவனைச் சிலுவையி -லறையும். ஓசன்னா பாடி அழைத்துச் சென்றவரை அபிஷேகம் செய்து அரியணை ஏற்ற வேண்டியதல்லவா கடமை. இவர்களோ சிலுவையிலறைந்து கொலை செய்யத் துணிந்தனர். தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இவை நிகழ்ந்ததாயினும் தற்கால சடங்காச்சா -ரங்கள் நம் சிந்தனையை இழுக்கின்றன.

இன்றும் ஆண்டுதோறும் அனேகர் ஓசன்னா பாடுகின்றனர். அறியாமல், அர்த்தமின்றி... அதுவும் அவரை அறையத்தானே... தங்கள் இதய அரியணையில் அவரை அரசராக்கியவர்கள் பாக்கி -யவான்கள்...

குருத்தோலையின் பிரசங்கக் குறிப்புகள்:

1.யோவா 12:13 குருத்தோலை என்றால் என்ன?

லேவி 23:40 ஓலை (எல்) பேரீச்ச இலைகள் 

எண் 33:9 பேரீச்சை இலை (எல்) மாரா மறக்கப்பட்ட இடம் 

வா.ம்: யாத் 15:23,25 இஸ்ரவேலரின் கசப்பு மாறிப்போனது.

2. மாற் 11:9 ஓசன்னா என்றால் என்ன? 

  • மத் 21:9 கர்த்தருடைய நாமம் 

  • யோவா 12:13 இஸ்ரவேலின் ராஜா 

  • மாற் 11:10 பிதாவாகிய தாவீதின் இராஜ்யம் 

  • மத் 21:15 ஆர்பரிப்பு

வா.ம்: யோசு 6:20 இஸ்ரவேலர் ஆர்பரித்தனர் எரிகோ மதில் விழுந்தது.

3. மாற் 11:8 வஸ்திரங்கள் என்றால் என்ன?

  • வெளி 16:15 வஸ்திரம் (எல்) ஜீவியத்தைக் காத்துக்கொள்வது 

உ.ம்: ஆதி 39:12 போத்திபாரின் மனைவி வஸ்திரத்தினல் பாவியானாள்.

வா.ம்: ஆதி 49:11 யோசேப்பு தன் வஸ்திரத்தை இரத்தத்தில் தோய்த்தான்.

மாற் 11:8 வஸ்திரங்களை விரித்து என்றால் என்ன?

 2இரா 9:13 யெகூவை வஸ்திரங்களை விரித்து இராஜாவாக்கினார்கள்.

வி.ம்: மாற் 15:18 இயேசுவும் யூதருடைய ராஜாவாக உயர்த்தப்பட்டார்.

4. மத் 21:8 மரக்கிளைகள் என்றால் என்ன? 

நெகே 8:15 ஐந்து வித கிளைகள்:

1. ஆதி 8:11 ஒலிவ மரத்தின் இலை (எல்) நற்செய்தி 

2. ரோம 11:24 காட்டு ஒலிவகிளை (எல்) சுபாவங்கள்

3. சக 1:11 மிரிருது செடியின் கிளை (எல்) அமைதலும் அமரிக்கையும்

4. லேவி 23:40 பேரீச்ச மரக்கிளை (எல்) மகிழ்ச்சி 

5. எசே 19:11 அடர்ந்த மரக்கிளை (எல்) செங்கோல் (அ) அதிகாரம்

5. யோவா 12:14 கழுதைக்குட்டி என்றால் என்ன?

1. ஆதி 32:15 பிரித்தெடுக்கப்பட்டது 

2. மத் 21:4 சாந்த குணம்

கழுதையின் இரண்டு தன்மைகள்:

1. மத் 21:4 இயேசுவை ஏற்றிக்கொண்டு வந்தது. 

2. யோவா 12:15 இயேசுவை ஏற்றிக்கொண்டு போனது

வி.ம்: வந்தது (எல்) இயேசு மனுஷகுமாரனாக பூமிக்கு வந்ததையும், போனது (எல்) பின் நாட்களில் மணவாட்டி சபையை எடுத்துக் கொண்டுப்போவதையும் குறிக்கும்.

நாடுகளும்-க்ஷ குருத்தோலையும்:--

கிறிஸ்தவம் பரவியிருக்கும் அணைத்து நாடுகளிலும் குருத். -தோலை ஞாயறு அனுஷ்டிக்கப் படுகின்றது. ஆனால், நாட்டுக்கு நாடு சில மாறுதல்களையும் காணமுடிகின்றது. குருத்தோலை ஞாயிறை கொண்டாடுகின்ற சில நாடுகளைப்பற்றி பார்போம். 

1.யோர்தான் மற்றும் இஸ்ரல் நாடுகள்:

யோர்தான் மற்றும் இஸ்ரவேல் நாடுகளில் ரோஜா பூக்களால் செய்யப்பட்ட சிலுவையை சுமந்து கொண்டு குருத்தோலைகளைப் பிடித்து ஓசன்னா என்ற முடிக்கத்தோடு செல்வார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை, மரபு வழித்திருச்சபை, கீழைச்சபை, ஆங்கிலிக்கன் சபைகளைளச் சார்ந்த மக்கள் இதை முக்கிய நிகழ்வாகவே கருதி செய்கின்றனர்.

அத்துடன், குருத்தோலையினால் செய்யப்பட்ட திருநீரில் அமுக்கி, அந்நீரை சபை குருவானவர் மக்கள் மீது தெளிப்பதும், தங்கள் அங்கிகளை சிலுவை வடிவில் மடிப்பது போன்ற சில பாரம்பரியமான பழக்கங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

2.லாத்வியா நாடு: 

இந்நாட்டு மக்கள் ஈச்சமரத்தின் ஓலை குருத்துக்களுக்கு

பதிலாக "வில்லோ" (WILLOW) மரத்தின் கிளைகளை உயர்திப் பிடித்து இவ்விலாவைக் கொண்டாடுகின்றனர்

God bless you 

Umn ministry 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*