ஆவியானவரின் வருகையும் வல்லமையும்.The coming and power of the Spirit.Understanding the Coming and Power of the Spi

0


ஆவியானவரின் வருகையும் வல்லமையும்.The coming and power of the Spirit.Understanding the Coming and Power of the Spi


  • ஆவியானவரின் வருகை மற்றும் சக்தி ஆவியானவரின் வருகை மற்றும் ஆற்றலைப் புரிந்துகொள்வது மற்றும் ஆவியானவரின் வருகையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மற்றும் ஆவியானவரின் வருகை மற்றும் ஆற்றலைப் புரிந்துகொள்வது ஆவியானவரின் வெளிப்பாடு மற்றும் அதிகாரம் ஆவியானவரின் வருகையை ஆராய்வது மற்றும் ஆற்றலை அனுபவிப்பது ஆவியின் வருகை மற்றும் வலிமையை அனுபவிப்பது.



எசேக்கியேல் 36:26-27 "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து. உங்கள் உள்ளத்திலே புதிதான தான ஆவியைக் கட்டளையீட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்."

இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் பிதா முன்னறிவித்த ஆவிக்குறிய திட்டத்தை புரிந்து கொள்ளாமல் தேவனுடைய கட்டளைகளை கைகொள்ளும் படி தங்கள் சுய பெலத்தினாலே போராடி இறுதியில் தோற்றும் போகிறார்கள். பிதாவாகிய ஆண்டவரும் குமாரனாகிய கிறிஸ்துவும் பரத்தில் வீற்றிருந்தாலும் இங்கே இப்பொழுதே உங்களுடன் தங்கியிருந்து |உங்கள் நண்பனாக உதவி செய்ய பூமியில் இருக்கும் திரித்துவத்தின் மூன்றாவது நபர் பரிசுத்த ஆவியானவர் அந்த ஆவியானவரை அறிந்து கொள்ளாமல் கிறிஸ்துவுடன் இணைந்து நடக்கும் வாழ்க்கை எவ்வளவு அற்ப்புதமானது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பு எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பரிசுத்த ஆவியானவரின் வருகை. கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தது போலவே தீர்க்கதரிசிகள் ஆவியானவரின் வருகையையும் தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார்கள் அதாவது இயேசுவானவர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தேவன் யோவேலிடம் கூறினார்.

யோவேல் 2:28-29 "அதற்க்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்."

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பரலோகத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன் சீஷர்களுக்கு தெளிவாக கட்டளை கொடுத்து சென்றார். யோவான்

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார். நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த

ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்பதை கூறி எருசலேமை விட்டு

போகாமல் பிதாவின் வாக்குதத்தம் நிறைவேற காத்திருக்கும் படி அவர்களுக்கு

கட்டளை கொடுத்தார். (அப்போஸ்தலர் 1:4-5) அது மாத்திரமல்ல பரிசுத்த

ஆவியானவர் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுவார் என்பதையும் சொன்னார்.

அப்போஸ்தலர் 1:8 "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."

பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயத்தீர்ப்பை

குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார். சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்று ஆண்டவராகிய இயேசு முன்னறிவித்தார். பரிசுத்த ஆவியானவர் அற்புதமாக வெளிப்பட்டார். 

எப்படி பட்ட ஒரு நுழைவு. இடிமுழக்கம் போன்ற பலத்த காற்று, அக்கினிமயமான நாவுகள், ஆவியானவரின் வருகை ஆண்டவருடைய வல்லமையின் வெளிப்பாடு. அப்போஸ்தலர் 2:1-4 "பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்த போது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஒரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்து. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."

அது ஏசாயா முன்னறிவித்தபடியே நடந்தது.பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் பேசுவார். ஏசாயா 28:11.

ஸ்தேவான் கல்லெறியப்பட்ட போது வேதனையை சகித்து கொள்ள பெலன் கொடுத்ததும் பரிசுத்த ஆவியானவரே. இயேசு அவனுடைய வருகையை எதிர் நோக்கி காத்திருந்தார். சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் பிதாவாகிய தேவன் (அப்போஸ்தலர் 7:54-56) இஸ்ரவேல் புத்திரரை விடுவித்து வழி நடத்த மோசேக்கு வல்லமை கொடுத்தவர் அவரே. யோசுவாவின் வாழ்க்கையில் வல்லமையாக நின்றவர் அவரே. செங்கடலை இரண்டாக பிளந்த பெருங்காற்றின் பின்னால் மறைந்திருந்த அற்புதமான சக்தி அவரே. எரிகோவின் மதில்களை நொறுக்கி தரை மட்டமாகிய மகிமையுள்ள வல்லமை அவரே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாமுவேல் எலியா எலிசா இவர்களது ஊழியத்தில் பெரும் சக்தி அவரே. இயேசு கிறிஸ்து ஒரு மனிதனாக க வந்தார். ஆயினும் அவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அவர் அற்புதங்களை செய்தார். லூக்கா 4:18ல் கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.

அப்போஸ்தலர் 10:38 "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடைனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." மேல் வீட்டறையில் பரிசுத்தாவியானவரின் வல்லமையை பெற்று கொண்ட அப்போஸ்தலர்களும் இயேசுவின் சீஷர்களும் பெரிய அற்புதங்களை செய்தார்கள். பேதுருவின் நிழலிருந்து தேவ வல்லமை புறப்பட்டு சென்று அநேகரை சுகப்படுத்தியது. பவுலின் உருமால்கள் மற்றும் கச்சைகளை பிணியாளிகள் மேல் போட்ட போது அவர்கள் சுகமடைந்தார்கள் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு தேவ சித்ததையும், திட்டத்தையும் செய்தார்கள். எத்தியோப்பிய மந்திரி எப்படி இரட்சிக்கப்பட்டார்? அப்போஸ்தலர் 8:29ல் ஆவியானவர் நீ போய் அந்த இரதத்துடனே சேர்ந்து கொள் என்று பிலிப்புடனே சொன்னார். இவர்களுடன் பேசியது பரிசுத்த ஆவியானவராகிய ஆண்டவரே பேசினார். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையையும், பிரசனத்தையும் மறுதலிப்பதன் மூலம் நாம் அவரை துக்கப்படுத்துகிறோம். வேதாகமத்தில் எங்காவது பிதாவாகிய தேவனை

துக்கப்படுத்தாதிருங்கள், குமாரனாகிய ஆண்டவரை துக்கப்படுத்தாதிருங்கள் என்று
எழுதியிருக்கிறதா? பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்ததிருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரை பார்த்து ஆண்டவர்

என்ன கூறுகிறார். நீங்கள் என் ஆவியை துக்கப்படுத்தினீர்கள் என்று கூறுகிறாரே

தவிர என்னை துக்கப்படுத்தி விட்டீர்கள் என்று கூறவில்லை. பரிசேயரிடம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ன கூறுகிறார்.லூக்கா 12:10 "எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை." பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பாவம் அபாயகரமானது. பரிசுத்த ஆவியானவருடைய கிரியைகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவற்றை பற்றி விமர்சிக்காதே. அப்போஸ்தலர் அதிகாரத்தில் நாம் படித்து பார்க்கும் போது சீஷர்கள் ஜெபத்திலும் உபவாசத்திலும் தரிதிருந்து பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்று கொண்டு அவர் வழி நடத்துதலின் படியே ஊழியம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரை அநேக சபைகள் மறுதலிக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் மிகவும் கண்ணியமானவர். நீ அழைக்கும் வரை உன்னறைக்குள் நுழையமாட்டார். நீ அவரை வாஞ்சிக்கும் வரை அவர் உன்னிடம் இடைப்படமாட்டார். அவர் உனக்காக காத்து கொண்டிருக்கிறார், மாதக் கணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட நீ அவரை அழைக்கும் வரை உனக்காக

காத்து கொண்டேயிருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவரின் பிரசனத்தை உணர்ந்த ஒருவர் எப்பொழுதும் ஆண்டவரகிய இயேசுவை மகிமைபடுத்தி அவரையே உயர்த்துவார். பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவர் மீது தங்கள் கொண்டுள்ள அன்பை தெளிவாக காண்பிக்கும் போது நாம் அந்த அன்பை காண்பிக்க வேண்டியது அதிக அவசியம். உன் வாழ்க்கையை பொறுப்பெடுத்து கொள்ளுமாறு நீ அவரிடம் கேட்பது மிகவும் அவசியம். உன்னுடனே உன்னில் என்றைக்கும் இருக்குமாறு அனுப்பபட்டவர் அவரே. நீ அவரை அறிந்து அவருடன் தொடர்பு கொள்ள முடியும் அவர் உன்னை உயிர்ப்பிப்பார். பரிசுத்த ஆ ஆவியானவர் பேசுவதெல்லாம் இயேசுவை பற்றியே. நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி அதிகம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை வாஞ்சிக்க வேண்டும்.

யோவான் 15:26 "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்."

உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாமல் உமது பரிசுத்த ஆவியை

என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமால் இரும். (சங்கீதம் 51:11) என்று தாவீது சொல்கிறார். பவுல் நம்மை ஆவியில் நடந்து ஆவியில் வாழ்ந்து ஆவியில் ஜெபிக்க சொல்கிறார். நம் ஆவி மனிதன் பரிசுத்த ஆவியால் பெலப்பட வேண்டும் என்கிறார். பேதுருவும் பிலிப்பும் அவரோடே பேசினார்கள்.கிறிஸ்துவும் ஆவியானவராலே நடத்தப்பட்டார். பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரம்பி நடத்தப்படும் போது நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வோம் என்று இயேசு சொன்னார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன் (யோவான் 16:7). பரிசுத்த ஆவியானவரே உங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார். 

அவர் என்னுடையதில் இருந்து
உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைபடுத்துவார். யோவான் 16:13-14 "சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்ச்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்ன மகிமைப்படுத்துவார்" பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதுமே இயேசுவை மகிமைபடுத்துகிறார்.

இன்றைக்கு அநேக சபைகளில் சபைகளில் ஊழியக்காரர்கள் தங்கள் வேத ஞானத்தினாலும் வேத அறிவை கொண்டு பிரமாதமாக பிரசங்கிக்கிறார்கள் அதை கேட்கும் ஜனங்கள் என்ன அருமையாக பிரசங்கம் என்று ஆமோதிக்கிறார்கள். மேலும் அதை கேட்பவர்கள் கேட்கும் சத்தியத்தில் நிலைத்து நிற்பதில்லை. சத்தியத்துக்கு கீழ்படிய முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரை சார்ந்து ஊழியம் செய்வதில்லை தங்கள் வேத அறிவையும் உபதேச கொள்கைகளையும் சார்ந்தே வருகிறார்கள். அவர்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதில்லை அந்த சபை ஜனங்கள் நயவசனிப்புள்ள பிரசங்கங்களால் திருப்தியடைந்தாலும் இன்னும் அடிமைதனத்திலே இருக்கிறார்கள். சத்தியமே தெரியாத பேதுருவும் அப்போஸ்தலர்களும் பரிசுத்தாவியினால் நிறைந்து பிரசங்கித்த போது ஆயிரக்கணக்கான பேர் இரட்சிக்கப்பட்டார்கள். லீதியாள் பவுல் பிரசங்கிப்பதை கேட்டு கொண்டிருந்த போது ஆவியானவர் அவளது இருதயத்தை திறந்தார் அவளும் அவள் வீட்டாரும் சத்தியத்துக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்று கொண்டார். அநேக சபைகள் ஆராதனை வேளைகளில் பாடல்களை பாடுகிறவர்களும் இசை கருவிகளை இசைக்கிறவர்களும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை சார்ந்து இருப்பதில்லை. பாடல்களை அருமையான இசை நயத்தோடு பாடினாலும் பாடல்களை நன்றாக பாடினாலும் அதில் தேவ பிரசன்னம் கடந்து வருவதில்லை ஆனால் பாடவே பாடத் தெரியாத ஒருவர். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு பாடும் போது அநேகர் கண்ணிரோடு தங்களை அற்பணிக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு சபைகளில் எழுப்புதலுக்காக கூட்டங்களை நடத்தும் போதகர்கள் அதற்க்காக வேத அறிவில் நிறைந்த பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை சாராத பிரசங்கிகளையும், பாடகர்களையும், இசைக்கிறவர்களையும் பயன்படுத்துவதால் இவர்கள் செய்கிற எல்லா காரியங்களும் ஒரு பொழுது போக்கு கலை நிகழ்சிகளை போல தான் இருக்கிறது. அடுத்து இயேசு கிறிஸ்து என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள் என்றார். இன்றைக்கு பல ஊழியக்காரர்களால் பிசாசுகளை துரத்த முடியவில்லை. ஆனால் பிற மதங்களில் பிசாசுக்களை எளிதாக துரத்திவிடுகிறார்கள். தேவன் எங்கும் நிறைந்தவர் மிகுந்த வல்லமையுடையவர். சாத்தானோ அந்த வல்லமையில் சிறு பகுதியையே கொண்டவன். ஆண்டவருடைய மிகப்பெரிய இயற்கைக்கப்பாற்பட்ட வல்லமையை பயன்படுத்த வேண்டிய ஊழியக்காரர்கள் அதை பயன்படுத்த முயற்சியே எடுக்காத போது சாத்தானின் சீடன் தனக்கிருக்கும் மிகச்சிறிய அதிகாரத்தை நூற்றுக்கு நூறு பயன்படுத்தி விசுவாசியை விட அதிக வல்லமையுள்ளவனாக காணப்படுகிறான். நீங்கள் சர்வ வல்லவருடைய சக்தியை பயன்படுத்தும் காலம் இதுவே. தேவன் எந்த பிசாசையும் விட பல மடங்கு பெரியவர் அல்லேலாயா.

கிறிஸ்துவின் ஒரு வார்த்தையே சாத்தானை அழிக்ககூடும் என்பதை நீங்கள்

அறிந்து கொள்ள வேண்டும் அவருடைய தூதர்களில் ஒருவனே சாத்தானை


குழிக்குள் கட்ட கூடியவர் (வெளிப்படுத்தின விசேஷம் 20:1-3) எனவே தேவன் பெலவீனரல்ல அவரது வல்லமையை பயன்படுத்த தெரியாத மக்கள் தான் பெலவீனர்.

சகரியா 4:6-7 "அப்பொழுது அவர்: செருபாபேலுக்கு சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவ கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்." பரிசுத்த ஆவியானவரை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் கடவுள் என்பதை மறந்து விட வேண்டாம் இது உங்களுக்கு பழக்கமில்லாத அந்நிய வார்த்தையாக தோன்றினாலும் அது வேத வாக்கியத்தை போல அசைக்க முடியாத அடிப்படை உண்மை.

யோபு 33:4 "தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது"

என்று யோபு சொல்கிறார், பிதாவாகிய தேவன் பரலோகத்தில் மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருந்து மனுஷனை உண்டாக்குவோமாக என்று கூறிய போது பரிசுத்த ஆவியானவர் அவர் பூமியில் கிரியை செய்து கொண்டிருந்தார். 

படைப்பின் போது தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடி கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:2) தாவிது பூமியின் படைப்பை பற்றி குறிப்பிடுகையில் சங்கீதம் 104:30 "நர்உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீ பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்."

பரிசுத்தாவியின் ஒத்தாசை இல்லாமல் நாம் சாதிக்கும் எந்த காரியமும் மனுஷிகமானதும் நித்திய மதிப்பற்றதாகவுமே இருக்கும். அப்போஸ்தலர்களும் சிஷர்களும் பரிசுத்தாவியானவரினால் ஆளுகை செய்யப்பட்டே ஊழியங்களை நிறைவேற்றினார்கள்.

 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்ட பிறகே ஊழியம் செய்ய ஆரம்பித்தார். நீ .நீங்கள் ஜெபிக்காமலே தேவனுடைய உதவியை நாடாமலே பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமலே நயவசனிப்பினாலும் வார்த்தை ஜாலத்தினாலும் உங்கள் பேச்சை கேட்கும் படி மனிதர்களை கவர்ந்து கொள்ள முடியும். ஊழியங்களிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை இல்லாமல் பல காரியங்களை செய்யலாம். 

ஆனால் தேவனுடைய பார்வையில் அவைகள் யாவும் மரமும் வைக்கோலும் புல்லுமாயிருப்பதை நீங்களே காண்பீர்கள். ஆகவே பரிசுத்த ஆவி மூலம் பெற்ற பெலத்தின் படி நாம் ஊழியம் செய்தால் மாத்திரமே அந்த ஊழியமானது நித்திய காலமும் நிலைத்திருக்கும். இதற்க்கு மாறாக நாம் தேவனுக்கு செய்யும் ஊழியத்தை ஜெபமில்லாமல், தேவனை சார்ந்து கொள்ளாமலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமலும் செய்து வந்தால் அந்த ஊழியம் உயிரில்லாத ஊழியமாக தான் இருக்கும்.

 எனவே நம்முடைய ஊழியத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்டு நம் மீது ஆவியின் அபிஷேகம் எப்போதும் தங்கியிருப்பதற்க்கு தீராத வாஞ்சை கொண்டவர்களாக இருப்போம்.

மீகா 3:8 "நானே, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, சுர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.'

2கொரிந்தியர் 13:14 "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்.




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*