மாயமற்ற கிறிஸ்தவ வாழ்க்கைExploring the Depths of The Mystical Christian Life
மாயமற்ற கிறிஸ்தவ வாழ்க்கை
The Mystical Christian Life
the mystical christian lifechristian mysticismchristian spiritualitymystical experiencescontemplative prayerdivine unionspiritual enlightenmentmystical theologymystical practicesmystical journey
மாய்மாலம் என்றால் உள்ளத்தில் ஒன்று நினைத்து புறத்தில் ஒன்று பேசுவது அல்லது நடிப்பது.
தேவன் அருவருக்கிற பாவங்களில் ஒன்று மாய்மாலம். கிறிஸ்தவர்களாகிய நாமும் பல நேரங்களில் நம்முடைய செயல்களினால் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைபடுத்தாமல் நம்முடைய சுயமகிமையை தேடுவது உண்டு.
இயேசு கிறிஸ்து மாய்மாலமான வாழ்க்கை வாழ்ந்த பரிசேயர் வேதபாரகரை மிகவும் கடிந்து பேசினார், உங்களுக்கு ஐயோ என்று அவர்களை எச்சரித்தார். இயேசு கிறிஸ்து இவர்களை மாயக்காரரே, மதிகேடரே, குருடரான வழிகாட்டிகளே, சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே என அழைத்தார்[மத்தேயு:23].
இந்த பரிசேயர் வேதபாரகர் வேதத்தை நன்கு அறிந்திருந்தும் தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்து அவரை மகிமைப்படுத்தாமல் தங்கள் சுயமகிமையை தேடி மாய்மாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தனர்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் இருதயத்தை ஆராய்ந்து அறிகிறவர். அவருக்கு முன்பாக நாம் எதையும் ஒளிக்கவோ மறைக்கவோ முடியாது. நம்முடைய அந்தரங்கத்தை, இருதயத்தின் எண்ணங்களை அறிந்தவர் அவர் ஒருவரே. நாம் மாயமற்ற கிறிஸ்தவர்களாயிருக்க வேண்டும் என வேதம் நம்மை எச்சரிக்கிறது.
கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும் ராஜரீக ஆசாரிய கூட்டமாயும் தெரிந்துக்கொள்ளபட்ட நாம் எந்தெந்த காரியங்களில் மாயமற்ற கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என வேதத்தின் வாயிலாக சிலவற்றை தியானிக்கலாம்.
1. மாயமற்ற அன்பு
உங்கள் வெறுத்து, :12:9]. அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்[ரோமர்
இன்றைய காலங்களில் அன்பு தணிந்துவிட்டது. ஆசீர்வாதங்களுக்காய் மட்டும் தேவனை நோக்கி
பார்க்கிறதும் தேவைகளுக்காய்
மனிதர்களிடம் அன்பு செலுத்துவதும் என மனிதனின் அன்பு சுயநலமுள்ளதாய், மாய்மாலமானதாய் மாறிவிட்டது. மனிதர்கள் பல நேரங்களில் உள்ளத்தில் அன்பில்லாமல் புறம்பே சிரித்து பேசி தங்கள் சுயஆதாயத்திற்காக அன்பாய் இருக்கிறதை போல காண்பித்துக் கொள்ளுகிறார்கள். இயேசுவின் சீஷனான யூதாசும் கூட மாய்மாலமான அன்பை காட்டி முத்தத்தினால் அவரை காட்டிக்கொடுத்தான்.
ஆனால் தேவன் நம் மேல் வைத்த அன்பு பெரியது! உண்மையான அன்பு! பாவிகளான நம்மை மீட்க தம்மையே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த உன்னத அன்பு. இந்த தூய்மையான அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதே சுயநலமில்லாத அன்பை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். இயேசு கிறிஸ்து நமக்கு போதித்த கற்பனைகளில் முதலாவது "நாம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் தேவனிடம் அன்புகூற வேண்டும்.
இரண்டாவது "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்பதே. இந்த கற்பனையில் நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். [கலாத்தியர்:5:14, யாக்கோபு:2: 8]. பிரியமானவர்களே நாம் தேவனிடம் உண்மையாய் அன்புகூராமல் மனிதனிடம் அன்புகூர முடியாது; அதுபோல மனிதனிடம் உண்மையாய் அன்புகூராமல் தேவனிடம் அன்புகூருகிறேன் என்று சொல்லுகிறவன் பொய்யன். வேதம் கூறுகிறது வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம் [[1யோவான்: 3:18].
நாம் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆத்துமாக்களைச் நம் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், இருதயத்தோடே ஒருவரிலொருவர் சுத்த ஊக்கமாய் அன்புகூருவோம்[1பேதுரு:1:22]. தேவனின் அன்பை ருசித்த நாம், சுத்த இருதயத்தோடே கிரியைகளினால் தேவனின் அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்.
2. மாயமற்ற பரிசுத்தம்
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்: உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு
மத்தேயு:23:25-271. இன்றைய சூழலில் நாம் தேவன்
அழைத்த பரம அழைப்பை மறந்தவர்களாய் உள்ளத்திலே
பல அசுத்தங்களை வைத்துக்கொண்டு பரிசுத்தவான்களை
காண்பிக்க முயற்சிக்கிறோம்.
நான் போல நம்மை
இரட்சிக்கப்பட்டவுடன்
பரிசுத்தவான்,
இரட்சிக்கபடாதவர்கள் எல்லாம் பாவிகள் என்ற எண்ணம்
நமக்குள் மேலோங்குகிறது.
தேவன் நம்மை
பாவத்திலிருந்து மீட்டு பரிசுத்தவானாய் மாற்றியது கறைதிரையில்லாத பரிசுத்த ஜீவியம் ஜீவிக்க என்பதை மறந்துபோகிறோம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அனுதினமும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து இயேசுவை போல மாற வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ
முயற்சிப்போம். ஏனென்றால் தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
ஒரு மனிதனின் உள்ளான மனிதன் ஆவியானவரின் ஆளுகைக்குள் இருக்கும் போது உண்மையான பரிசுத்தம் வெளிப்படும். அதாவது நம்முடைய ஏற்படும்
உள்ளான மாயமற்ற மனிதனில் பரிசுத்த
மனமாற்றத்தினால் வெளியே பிரதிபலிக்கின்ற மாற்றம்
தான்பரிசுத்தம்.
வேதம் கூறுகிறது நல்ல மனுஷன் தன்இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்து காட்டுகிறான் பொல்லாத மனுஷன் தன்னிடம் இருக்கும் பொல்லாததை எடுத்துக்
காட்டுகிறான்;
இருதயமாகிய பொல்லாத
பரிசுத்தத்திற்கு பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்
[லூக்கா: 6:45] வேதாகமத்தில்
எடுத்துக்காட்டாக வாழ்ந்த யோசேப்பை போல என்னை
அழைத்த தேவனுக்கு விரோதமாய் நான் எப்படி பாவம் செய்வேன் என்ற கேள்வி நம் இருதயத்தில்
ஒலித்துக்கொண்டே
இருக்கட்டும்.
உலகின் அசுத்தங்களுக்கு நம்மை விலக்கி காத்து பரிசுத்தத்திற்கு நேராய் ஓடுவோம்.
3. மாயமற்ற ஜெபம் உபவாசம்
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் உ पलीúmi ng W:6:5-6,17-18].
நாம் வெளியரங்கமாய் செய்கிற ஜெபங்கள் உபவாசங்களை
விட அந்தரங்கத்தில் செய்யும் ஜெபம் உபவாசம்
தேவனுக்கு மிகுந்த பிரியமாய் இருக்கிறது.
அதற்கு
தேவன் மனுஷர் காண்கிற பிரகாரமாய் வெளியரங்கமாய்
பலனளிப்பார் என வேதம் கூறுகிறது.
இயேசு கிறிஸ்து
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு
ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி
விதவைகளின் வீடுகளை பட்சித்துப்போடுகிறீர்கள்;
இதனால் அதிக ஆக்கினையை அடைவீர்கள் என கடிந்து கொண்டார்.
வேதம் கூறுகிறது நீங்கள்
உபவாசிக்கும்போது, மாயக்காரைப் போல முகவாடலாய்
இராதேயுங்கள். கிறிஸ்தவர்களாகிய நாம்
இந்த சத்தியங்களை அறிந்திருந்தும் அதை பின்பற்றுவதில்லை.
நான் தினமும் அதிகாலையில் இரண்டு மணிநேரம்
ஜெபிக்கிறேன்; 40 நாட்கள் உபவாசம் இருக்கிறேன்
அதனால சாப்பிடமாட்டேன் என்று நம்மையும் அறியாமல்
தனிப்பட்ட முறையில் செய்யும் ஜெபத்தை உபவாசத்தை
பிறரிடம் பெருமையாக பகிர்ந்து கொள்ளுகிறோம் அல்லவா.
இப்படியாய் நம்முடைய தனிப்பட்ட ஜெப வாழ்க்கையை மனுஷா அறிய வேண்டுமென்று நாம் பிரஸ்தாபப்படுத்தும் போது அதின் பலனை நாம் அடைந்து தீர்ந்ததென்று வேதம் கூறுகிறது. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் சுயமகிமையை எதிர் நோக்கி கிரியை செய்கிறவர்களாய் இராமல் தேவன் நம்மில் மகிமையடைய கிரியை செய்கிறவர்களாய் மாறுவோம்.
தேவன் விரும்புகிற பிரகாரமாய் நம்முடைய ஜெப வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுவோம்.
4. மாயமற்ற தர்மம்
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் पनीល់ [L:6:1-3]. உங்களுக்குப் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்யும் போது மனுஷர் நம்மை புகழும்படி வெளியரங்கமாய் செய்யாமல் அந்தரங்கமாய் இருப்பதற்கு நம் வலதுகை செய்வதை நமது இடதுகை அறியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் எளியவர்களுக்கும் ஊழியங்களுக்கும் செய்கிற சிறு உதவிகளை பிறரிடம் சொல்லி பேர் பிரஸ்தாபத்தை எதிர்பார்க்க கூடாது.
நாம் எப்படிப்பட்ட எண்ணத்தோடு தர்மம் செய்கிறோம் என்பதை தேவன் அறிவார். தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தாமல் நம் சுய புகழ் விளம்பரத்திற்காக செய்யும் எந்த தாமமும் தேவனுக்கு உகந்ததல்ல. அதின் பலன் இந்த பூலோக வாழ்க்கையோடு முடிந்து போம்.
நம்முடைய தர்மம் அந்தரங்கமாய் இருக்கும் போது மட்டுமே பரலோகத்தின் தேவன் வெளியரங்கமாய் நமக்கு பலனளிப்பார். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்று இயேசு சொன்னதை நாம் லூக்கா 14: 13,14 வசனங்களில் வாசிக்கலாம். நாம் தாமம் செய்யும் போது உண்மை மனதுடன், எந்த ஒரு புகழோ, பெருமையோ, கனமோ எதிர்பார்க்காமல் எச்சரிக்கையாய் இருப்போம். செய்ய
5. மாயமற்ற விசுவாசம்
பவுல் தீமோத்தேயுவை குறித்து எழுதும் போது உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன் என்று சொல்லுகிறார்.[|I தீமோத்தேயு 1:4,5]. அந்த மாயமற்ற விசுவாசம் தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது.
தீமோத்தேயுவின் தகப்பன் கிரேக்கனாய் இருந்தாலும் அவனது தாயும் பாட்டியும் போதித்த மாயமற்ற விசுவாசம் அவனுக்குள்ளும் நிலைத்திருந்தது. இன்றைய சூழலில் நம்முடைய விசுவாசம் சூழ்நிலைக்கேற்ப மாறுபடுகிறது. சபையில் வந்தால் பக்தி பரவசமும் உலகத்தாரோடு சேரும் போது அவர்களுக்கு ஏற்ப நம்மை மாற்றி கொள்ளுவதும் என ஒரு மாய்மாலமான வாழ்க்கை வாழுகிறோம்.
உண்மையான விசுவாசி எப்பொழுதும் தன் எஜமானுக்கு உண்மையாயிருப்பான். கஷ்டமோ, நஷ்டமோ,இன்பமோ, துன்பமோ எச்சுழலிலும் அவனது இருதயம் தேவனை பற்றியே இருக்கும். வேதம் கூறுகிறது ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் பிரயோஜனமென்ன? கிரியைகளில்லாத செத்ததாயிருக்கிறது[யாக்கோபு:2:14-17], ஒரு அவனுக்கு விசுவாசம் சகோதரன் வஸ்திரம் ஆகாரம் இல்லை என்று வரும் போது நாம் எந்த உதவியும் செய்யாமல் சமாதானம் சொல்லி அனுப்புவது, தன் சொந்த ஜனங்களை விசாரியாமலிருப்பது, உதவி செய்ய மனமில்லாதபோது சூழ்நிலைகளை காரணம் காட்டுவது அல்லது பல குற்றங்களை மற்றவர்கள் மேல் சுமத்தி நம்மை ஒதுக்கிக்கொள்ளுவது போன்றவை கிரியைகளில்லாத செத்த விசுவாசியின் அடையாளம்.
அன்பினாலே கிரியை செய்கிற விசுவாசமே உதவும் என வேதம் கூறுகிறது. விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே. (ரோமர்:14:23:கலாத்தியர்:5:6], கிறிஸ்தவர்களாகிய நாம் சுத்த இருதயத் தோடு சுத்த மனசாட்சியுள்ளவர்களாய் இயேசு கிறிஸ்துவில் உண்மையாய் அன்புகூர்ந்து மாயமற்ற விசுவாசத்தோடு நல்ல போராட்டம் பண்ணுவோம்.நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளுவோம்.
6. மாயமற்ற ஆராதனை
இயேசு கிறிஸ்து பரிசேயர் வேதபாரகரை பார்த்து மாயக்காரரே! இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷனுடைய கற்பனைகளை போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்[மத்தேயு:15:7-9]. நாம் ஆலயத்திற்கு தவறாது செல்கிறோம் ஆராதனையில் கலந்து கொள்ளுகிறோம். நம்மை மீட்ட பரம தகப்பனை நம் இருதயம் கனம் பண்ணாமல் உலக காரியங்களை சிந்தித்து வாயால் மட்டுமே தேவனை துதிக்கிறது என்றால் தேவனுடைய பார்வையில் அது வீணான ஆராதனை.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும் நன்றியையும் செலுத்தி தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அற்பனிப்பதே உண்மையான ஆராதனை. பரிசுத்த அலங்காரத்துடனே நாம் கர்த்தரை தொழுதுகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து சாமாரிய ஸ்திரீயிடம் உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தொழுதுகொள்ளுகிறவர்கள் தம்மைத் இப்படிப் பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார் என்று கூறினார்(யோவான்: 4:23-24). பிதாவின் விருப்பத்தை உணர்ந்தவர்களாய் கர்த்தருடைய நாமத்திற்கு செலுத்த வேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்தி ஆவியோடும் உண்மையோடும் நம் தேவாதி தேவனை தொழுதுகொள்ளுவோம்.
7. மாயமற்ற தாழ்மை
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் வேதபாரகர் சமுதாயத்தில் தங்களை முதன்மைபடுத்த வேண்டும் என்று விரும்பினர். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ. ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:
நாமும் பரிசேயர்களை போல சபையில் வேலை ஸ்தலங்களில் குடும்பங்களில் மற்றவர்களைவிட நம்மை முதன்மைப்படுத்தி மரியாதையாய் நடத்த வேண்டும்.
என்று விரும்புகிறோம் அல்லவா? வேதம் கூறுகிறது தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான் ]23:6:
12). ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார்.தமது சீடரின் கால்களை கழுவி நமக்கு மாதிரியை காண்பித்தார். கிறிஸ்து இயேசுவிலிருந்த இந்த தாழ்மையான சிந்தையே நம்மிலும் இருக்க தேவன் எதிர்பார்க்கிறார். வேதம் சிந்தையுள்ளவர்களிடத்தில் கூறுகிறது ஞானம் தாழ்ந்த உண்டு. தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் [लीक: 11:2:22:41. மகிமையும் அன்பானவர்களே ஜீவனுமாம் நாமும் யோவான் ஸ்நான்னைப் போல அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று மனத்தாழ்மையோடு அவர் பாதம் பணிவோம். பெருமைபடுவதை மனத்தாழ்மையினாலே நம்மை நாம் முதன்மைபடுத்தி விட்டுவிட்டு ஒருவரையொருவர் நம்மிலும் மேன்மையானவர்களாக எண்ணுவோம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்
8. மாயமற்ற போதனை
வேதம் கூறுகிறது வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு அவர்கள் செய்கையின்படியோ செய்யுங்கள்: செய்யாதிருங்கள்
ஏனெனில், அவர்கள்
சொல்லுகிறார்கள், சொல்லியும்
செய்யாதிருக்கிறார்கள்
[மத்தேயு:23:1-3:14-15). பரிசேயரும் வேதபாரகரும் ஒருவனை தம் மார்க்கத்தானாகும் படி சுற்றித் திரிகிறார்கள்; அவனை தம் மார்க்கத்தானாக்கி தங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறார்கள் என்று கடிந்துக் கொண்டார். நாம் போதிக்கும் காரியங்களை முதலாவது நாம் பின்பற்ற வேண்டும். பின்பு போதிக்க முற்பட வேண்டும்:
இல்லையேல் நாமும் பரிசேயர்களைப் போல தேவனுக்கு சாட்சியாய் வாழாமல் பிறரையும் நரகத்தின் மகனாக்குவோம் என்பதில் ஐயமில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே களவுசெய்யக்கூடாதென்று போதியாமலிருக்கலாமா? பிரசங்கிக்கிற நீ कलांगा?..... எழுதியிருக்கிறபடி.தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே
[ரோமர்:2:21-241. மனுஷனுடைய கற்பனைகளை நாம் போதியாமல் தேவனுடைய வார்த்தைகளை கற்பனைகளுக்கு கீழ்படிந்து இயேசுவை வெளிப்படுத்துவோம். அறிவிப்போம்.அவருடைய சாட்சியாய் வாழ்ந்து
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் வேதத்தின் இரகசியங்களை அறிந்திருந்தும் அவருடைய வார்த்தைக்கு கீழ்படியால் வாழும் போது பரிசேயர் வேதபாரகர் போல மாய்மாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழுகிறோம் என்பதில் ஐயமில்லை. இயேசு கிறிஸ்து இவர்களை மாயக்காரே என கடிந்து பேசினார். சபைக்கு வரும் போது பரிசுத்தமாய் உத்தம விசுவாசிகளாய் நம்மை காண்பித்து உலகத்தாரோடே கூடும் போது உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பதை விட்டுவிட்டு இயேசுவுக்காய் வாழுவோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய மலை பிரசங்கத்தில் சொன்ன வாக்கை நினைவில் கொள்ளுவோம் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது"[மத்தேயு:6:24]. இரட்சிக்கப்பட்ட நாம் மற்றவர்களை பார்த்து பாவிகள் என்று எளிதாக குற்றப் படுத்துகிறோம்.
ஆனால் நம்முடைய சாட்சியற்ற ஜீவியத்தினால் தான் அவர்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுவோம். இயேசு கிறிஸ்துவை நமக்கு மாதிரியாக கொண்டு வாழுவோம்.மாய்மாலமான வாழ்கையை ஒழித்துவிட்டு உண்மையான கிறிஸ்தவனாய் மாயமற்ற விசுவாசத்தோடும் அன்போடும் பரிசுத்தத்தை காத்துக்கொண்டு சாட்சியாய் வாழ்ந்து கிறிஸ்துவை பிரதிபலிப்போம்.
ஆவியோடும் உண்மையோடும் நம் தேவாதி தேவனை ஆராதிப்போம். எதை செய்தாலும் சுயமகிமை நாடாது தேவ மகிமையை நாடுவோம். கிறிஸ்து இயேசுவை வெளிப்படுத்தும் நிருபங்களாய் மாறுவோம் அநேகம் ஆத்துமாக்களை பரலோகத்திற்கு அழைத்து செல்லுவோம்.
தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.